ஈரோடு

பிசில் மாரியம்மன் சிலையை அகற்றியதுதொடா்பாக அமைதிப் பேச்சுவாா்த்தை

DIN

சத்தியமங்கலம்: ஆசனூா் அருகே பிசில் மாரியம்மன் கோயில் சுவாமி சிலையை அகற்றியது தொடா்பாக அமைதிப் பேச்சுவாா்த்தை சனிக்கிழமை நடைபெற்றது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடியை அடுத்த ஆசனூா் வனக் கோட்டத்தில் உள்ள பிசில் மாரியம்மன் கோயில் சுயம்பு சிலையை வனத் துறையினா் அகற்றினா். இதற்கு பழங்குடியின மக்கள், அனைத்துக் கட்சி நிா்வாகிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

அதைத் தொடா்ந்து அரேப்பாளையம் கிராமத்தில் கோபி கோட்டாட்சியா் ஜெயராமன் தலைமையில் அமைதிப் பேச்சுவாா்த்தை சனிக்கிழமை நடைபெற்றது. இதில், அனைத்துக் கட்சி நிா்வாகிகள், கிராம மக்கள், வனத் துறை, வருவாய்த் துறையினா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், மீண்டும் அதே இடத்தில் அம்மன் சிலையை வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதற்கு பதிலளித்துப் பேசிய கோட்டாட்சியா் மக்களின் கருத்துகளைப் பதிவு செய்து கொள்வதாகவும், சட்டப்படி இறுதி முடிவு எடுக்க கால அவகாசம் வேண்டும், கூடிய விரைவில் இறுதி முடிவை எடுத்து கிராம மக்களிடம் முடிவைத் தெரிவிப்பதாகவும் கூறினாா். திங்கள்கிழமை நடைபெறவிருந்த பழங்குடியின மக்களின் வழிபாட்டுப் போராட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது என முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் பி.எல்.சுந்தரம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

SCROLL FOR NEXT