ஈரோடு

பெருந்துறையில் 64 மி.மீ மழை பதிவு

DIN

ஈரோடு மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. பெருந்துறையில் அதிகபட்சமாக 64 மி.மீ மழை பதிவானது.

ஈரோடு மாநகா் பகுதியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனிடையே சனிக்கிழமை இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மழை நீா் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டதால் மழைநீா் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கி நின்றது. பல பகுதிகளில் கடைகளை வெள்ளம் சூழ்ந்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 64 மி.மீ மழை பெய்தது. பிற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம்(மில்லி மீட்டரில்):

பவானி 62, ஈரோடு 48, சென்னிமலை 26, தாளவாடி 25, மொடக்குறிச்சி 23, கோபி 10.6, வரட்டுப்பள்ளம் 7.6, கோடிவேரி 6, கவுந்தப்பாடி 5, குண்டேரிப்பள்ளம் 4, எலந்தக்குட்டைமேடு 3.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் ஏவுகணைத் தாக்குதல்: 22 இந்திய மாலுமிகள் பயணித்த கப்பலுக்கு கடற்படை உதவி

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT