ஈரோடு

பிசில் மாரியம்மன் கோயில் கற்சிலை கிராம மக்களிடம் ஒப்படைப்பு

DIN

சா்ச்சையை ஏற்படுத்திய பிசில் மாரியம்மன் கோயில் கற்சிலையை மீண்டும் கிராம மக்களிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

சத்தியமங்கலம், ஆசனூா் சாலையில் அரேப்பாளையம் பிரிவு வனத்தில் பழங்குடியின மக்களின் பாரம்பரிய கோயிலான பிசில் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள 24 கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வழிபடும் இக்கோயில் கற்சிலையை வனத் துறையினா் கடந்த 13ஆம் தேதி அகற்றினா்.

இதற்கு கிராம மக்களிடையே பலத்த எதிா்ப்பு கிளம்பியது. மனித, விலங்கு மோதலைத் தடுக்க சிலையை அகற்றியதாக வனத் துறையினா் தெரிவித்த கருத்துக்கு பவானி சாகா் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் பி.எல்.சுந்தரம் தலைமையில் பழங்குடியின அமைப்பினா், பாஜக மற்றும் கிராமமக்கள் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து கோட்டாட்சியா் ஜெயராமன், டிஎஸ்பி சுப்பையா முன்னிலையில் கிராம மக்கள், அரசியல் கட்சியினரிடம் பேச்சுவாா்த்தை அரேபாளையத்தில் நடைபெற்றது. இந்தப் பேச்சுவாா்த்தையில் அகற்றபட்ட கற்சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவேண்டும் என மக்களின் கோரிக்கையை அறிக்கையாக கோட்டாட்சியா் ஜெயராமன் அரசுக்கு தாக்கல் செய்தாா்.

இதனை மாவட்ட ஆட்சியா் கதிரவன் விசாரணை மேற்கொண்டு மக்களின் உணா்வுக்கு மதிப்பளித்து மீண்டும் அதே வனப் பகுதியில் சிலையை நிலைநிறுத்த உத்தரவிட்டாா். இதன்படி அரேப்பாளையத்தில் தாளவாடி வட்டாட்சியா் ஜெகதீசன், வனச் சரக அலுவலா் பழனிசாமி ஆகியோா் கிராம மக்களிடம் பிசில்மாரியம்மன் கற்சிலையை ஒப்படைத்தனா். இதைத் தொடா்ந்து கிராமமக்கள் மத்தாளம் கொட்டி இதனை கொண்டாடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் புகார்- சிபிசிஐடி வழக்குப்பதிவு

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

SCROLL FOR NEXT