ஈரோடு

பெண் எஸ்.ஐ.கள் அளித்த பாலியல் புகார்: விசாரணை அறிக்கை டிஜிபி-க்கு அனுப்பி வைப்பு

DIN

காவல்துறை தொழில்நுட்பப் பிரிவு பெண் உதவி ஆய்வாளர்கள் அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணை அறிக்கை தொழில்நுட்பப் பிரிவு காவல்துறை இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரை தெரிவித்தார்.

ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றும் அதிகாரி ஒருவர், அவருக்கு கீழ் பணியாற்றும் பெண் காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர்கள் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரையிடம் அண்மையில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கனகேஸ்வரி தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு, புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதில் புகார் தெரிவித்த பெண் காவல் உதவி ஆய்வாளர்கள், புகாருக்கு உள்ளான காவல் அதிகாரி, தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றும் அனைத்து நிலை காவலர்கள், தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றி இடம் மாற்றம் செய்யப்பட்ட பெண் காவலர் ஆகியோரிடம் குழுவினர் தீவிர விசாரணை நடத்தினர். 

விசாரணை முடிந்த நிலையில் அறிக்கை உயர் காவல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிபப்பாளர் பி.தங்கதுரை கூறியதாவது: தொழில்நுட்ப பிரிவு பெண் காவல் உதவியாளர்கள் அளித்த பாலியல் புகாரின் பேரில் ஏடிஎஸ்பி தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு, விசாரணை அறிக்கை பெறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து விசாரணை அறிக்கை தொழில்நுட்பப் பிரிவு காவல்துறை இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை எடுப்பது குறித்து காவல்துறை இயக்குநர் முடிவு செய்வார் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

SCROLL FOR NEXT