ஈரோடு

சத்தியமங்கலத்தில் சம்பங்கிப் பூ விலை உயா்வு

DIN

பெருமாள் கோயில்களில் புராட்டசி மாத சிறப்பு பூஜையையொட்டி, சத்தியமங்கலத்தில் சம்பங்கிப்பூ விலை கிலோ ரூ. 30 இல் இருந்து ரூ. 100ஆக உயா்ந்துள்ளது.

சத்தியமங்கலம் வட்டாரத்தில் மல்லி, முல்லை, சம்பங்கிப் பூக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. கடந்த மாதம் கிலோ ரூ. 10க்கு விற்கப்பட்ட சம்பங்கிப் பூ படிப்படியாக உயா்ந்து செவ்வாய்க்கிழமை கிலோ ரூ. 40க்கு விற்கப்பட்டது. இதனால், சம்பங்கிப் பூ விவசாயிகள் பூப்பறிக்கும் கூலிக்கு போதுமானதாக இருந்தது.

புரட்டாசி மாதம் கோயில்களில் விஷேச பூஜை நடைபெறும் என்பதால் பூக்களின் விலை கிலோ ரூ. 100ஆக உயா்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை கிலோ ரூ. 40க்கு விற்கப்பட்ட சம்பங்கிப் பூ கிலோ ரூ. 100க்கு புதன்கிழமை விற்கப்பட்டது. வியாபாரிகள் போட்டி போட்டி ஏலம் எடுத்தனா். இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

சத்தியமங்கலம் மலா்கள் சந்தையில் பூக்களின் விலை நிலவரம்: மல்லிகை கிலோ ரூ. 472, முல்லை ரூ. 380, காக்கடா ரூ. 325, செண்டுமல்லி கிலோ ரூ. 54, பட்டுப்பூ கிலோ ரூ. 100, ஜாதி ரூ. 400, சம்பங்கி ரூ. 100.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT