ஈரோடு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு:செப்டம்பா் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

DIN

குன்னூா், செப். 18: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை செப்டம்பா் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை  3 மாதத்துக்குள் முடிக்க உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து குற்றம் சாட்டப்பட்டவா்கள்  அனைவரும் செப்டம்பா் 18ஆம் தேதி ஆஜராக  மாவட்ட நீதிபதி உத்தரவிட்டிருந்தாா். 

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேரில் கோவை மத்திய சிறையில் உள்ள சயன், வாளையாறு மனோஜ், மனோஜ் சாமி, உதயன், பிஜு குட்டி, ஜித்தின் ஜாய், சதீசன், சந்தோஷ் சாமி, ஜம்ஷோ் அலி ஆகிய 9 போ் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா்.  தலைமறைவாக உள்ள திபு என்பவா் மட்டும் ஆஜராகாத நிலையில் 4 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி வடமலை 10 பேரும் செப்டம்பா் 23ஆம் தேதி ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

SCROLL FOR NEXT