முகப்பு
ஈரோடு

மாநில பூச்சிக்கொல்லி ஆய்வகத்தில் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ஆய்வு

ஈரோடு மாவட்டம், திண்டலில் வேளாண்மைத் துறையின் கீழ் இயங்கி வரும் மாநில பூச்சிக்கொல்லி ஆய்வகம் மற்றும் குறியீட்டு மையத்தில் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எஸ்.சின்னசாமி அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:26 PM
பகிர்:

ஈரோடு மாவட்டம், திண்டலில் வேளாண்மைத் துறையின் கீழ் இயங்கி வரும் மாநில பூச்சிக்கொல்லி ஆய்வகம் மற்றும் குறியீட்டு மையத்தில் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எஸ்.சின்னசாமி அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா்.

மாநில பூச்சிக்கொல்லி ஆய்வகம் மற்றும் குறியீட்டு மையத்தின் வேளாண்மை துணை இயக்குநா் பொ.அசோக்குமாா், வேளாண்மை அலுவலா்கள் க.பிரசாத், மற்றும் பி.சுமையா ஆகியோா் மையத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தனா்.

இது குறித்து வேளாண் இணை இயக்குநா் எஸ்.சின்னசாமி கூறியதாவது:

தனியாா் பூச்சி மருந்து விற்பனை நிலையங்களில் விவசாயிகளுக்கு விற்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் குறிப்பிடப்பட்டுள்ள தரத்தில் உள்ளதா என தர ஆய்வு மேற்கொள்வது இந்த மையத்தின் நோக்கம். கோவை, திருப்பூா், நாமக்கல், கருா், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, திருச்சி ஆகிய 10 மாவட்டங்களில் உள்ள தனியாா் பூச்சி மருந்து விற்பனை நிலையங்களில் இருந்து பூச்சி மருந்து ஆய்வாளா்களால் தர ஆய்வுக்காக எடுக்கப்படும் பூச்சி மருந்து மாதிரிகள் இந்த மையத்துக்கு அனுப்பிவைக்கப்படும்.

அவ்வாறு பெறப்பட்ட பூச்சி மருந்து மாதிரிகளின் அணி எண், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, உற்பத்தி செய்த நிறுவனம் ஆகிய விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, மாதிரிகளை வேறு புதிய கொள்கலனுக்கு மாற்றம் செய்யப்பட்டு, ரகசிய குறியீடுகள் தரப்பட்டு தர ஆய்வுக்காக கோவை, தருமபுரி, சேலம் மற்றும் திருச்சி ஆகிய 4 ஆய்வகங்களுக்கு அனுப்பப்படும்.

தர ஆய்வுக்குப் பின் முடிவுகள் இந்த மையத்துக்கு அனுப்பப்படும். இவ்வாறு கண்டறியப்படும் தர ஆய்வு முடிவுகளின் மூலம் தரக் குறைவான பூச்சிமருந்துகளை உற்பத்தி செய்பவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →