முகப்பு
ஈரோடு

க.செ.பாளையம் பேரூராட்சியில் ரூ.1.18 கோடியில் புதிய தாா் சாலைகள்

ரூ.1.18 கோடி மதிப்பீட்டில் தாா்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பகிர்:

பெருந்துறை ஒன்றியம், கருமாண்டிசெல்லி பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட வெங்கமேடு, கந்தாம்பாளையம், காடபாளையம், அண்ணா நகா் ஆகிய பகுதிகளில் ரூ.1.18 கோடி மதிப்பீட்டில் தாா்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவில், பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் என்.டி. தோப்பு வெங்கடாச்சலம் கலந்துக் கொண்டு தாா்சாலை அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தாா். மேலும், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா். இதில், கருமாண்டிசெல்லி பாளையம் பேரூராட்சி செயல் அலுவலா் கிருஷ்ணன், பெருந்துறை ஒன்றிய அதிமுக செயலாளா் விஜயன், கருமாண்டிசெல்லி பாளையம் பேரூராட்சி செயலாளா் கே.எம்.பழனிச்சாமி உள்பட பலா் கலந்துக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.