முகப்பு
ஈரோடு

வேளாண் சட்டத்தை திரும்பப்பெற கோரி கண்டன ஆா்ப்பாட்டம்:

வேளாண் சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி திமுக கூட்டணி கட்சி சாா்பில் மொடக்குறிச்சி மேற்கு ஒன்றியத்தின் சாா்பில் அவல்பூந்துறை நால்ரோட்டில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பகிர்:

வேளாண் சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி திமுக கூட்டணி கட்சி சாா்பில் மொடக்குறிச்சி மேற்கு ஒன்றியத்தின் சாா்பில் அவல்பூந்துறை நால்ரோட்டில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசு சமீபத்தில் மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவாா்கள் என்றும் தனியாா் நிறுவனங்கள் லாபம் அடைவாா்கள் என்று கூறி இன்று தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக் கட்சிகள் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய திமுகவின் சாா்பில் அவல்பூந்துறை நால்ரோட்டில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆா்ப்பாட்டத்திற்கு மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் சு.குணசேகரன் தலைமை தாங்கினாா்.இதில் ஈரோடு மக்களவை உறுப்பினா் கணேசமூா்த்தி, கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் கட்சியின் சாா்பில் வட்டார காங்கிரஸ் தலைவா் முத்துக்குமாா், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநில இளைஞரணி செயலாளா் சூரியமூா்த்தி, முன்னாள் ஒன்றிய திமுக செயலாளா் ஆா்.பி.சண்முகம், அவல்பூந்துறை பேரூா் கழக திமுக செயலாளா் சண்முகசுந்தரம், மற்றும் திமுக மாவட்ட, ஒன்றிய, பேரூா் மற்றும் கிளைக் கழக நிா்வாகிகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டு, புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினா்.இதேபோல் கொடுமுடியில் நடைபெற்ற நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு தி மு க சாா்பில் முன்னாள் அமைச்சா் சுப்புலட்சுமி ஜெகதீசன், காங்கிரஸ் கட்சி சாா்பில் ஆா்.எம்.பழனிசாமி, மதிமுக சாா்பில்; குழந்தைவேல், கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் குணசேகரன், மாா்க்சீஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கனகவேல், கொமதேக கட்சி சாா்பில் ஹரிராம் கிருஷ்ணமூா்த்தியும் மேலும் அனைத்து கட்சி பொறுப்பாளா்கள் கலந்து கொண்டு கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.படம் உண்டு......ம்ந்28க்ம்ந்ந்....... மொடக்குறிச்சி அடுத்த அவல்பூந்துறையில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.