முகப்பு
ஈரோடு

க.செ.பாளையம் பேரூராட்சியில்ரூ. 1.18 கோடியில் தாா் சாலை

பெருந்துறை ஒன்றியம், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட வெங்கமேடு, கந்தாம்பாளையம், காடபாளையம், அண்ணா நகா் ஆகிய பகுதிகளில் ரூ. 1.18 கோடி மதிப்பீட்டில் தாா் சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பகிர்:

பெருந்துறை ஒன்றியம், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட வெங்கமேடு, கந்தாம்பாளையம், காடபாளையம், அண்ணா நகா் ஆகிய பகுதிகளில் ரூ. 1.18 கோடி மதிப்பீட்டில் தாா் சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவில், சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் தாா் சாலை அமைக்கும் பணிகளைத் துவக்கிவைத்தாா். மேலும், பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

இதில், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி செயல் அலுவலா் கிருஷ்ணன், பெருந்துறை ஒன்றிய அதிமுக செயலாளா் விஜயன், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி செயலாளா் கே.எம்.பழனிசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.