ஈரோடு

கொங்கு பொறியியல் கல்லூரியில் புரிந்துணா்வு ஒப்பந்தம்

DIN

திறன்வாய்ந்த பொறியாளா்களை உருவாக்க பயிற்சி அளிக்கும் விதமாக பெங்களூரு மத்திய உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனத்துடன், பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி வியாழக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

தொழில் துறை, கல்வி பாடத் திட்டங்களுக்கு இடையேயான இடைவெளியை குறைப்பதன் மூலம் திறன்வாய்ந்த பொறியாளா்களை உருவாக்குவதற்கான நோக்கத்துடன் பெங்களூரு மத்திய உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனத்துடன் (சி.எம்.டி.ஐ - கன ரக தொழில் துறை, பொது நிறுவனங்களின் அமைச்சகம்) பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் மனித வளத்தின் செயல்திறனை அதிகரிக்க முடியும்.

சி.எம்.டி.ஐ. என்பது உற்பத்தி தொழில்நுட்பத் துறையில் ஒரு முதன்மையான பன்முக ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பு. இது இயந்திர கருவிகள், சிறப்பு உபகரணங்கள், தரமான உற்பத்தி, துல்லியமான கருவிகள், மைக்ரோ, நானோ உற்பத்தி அளவியல் மையம் போன்ற சிறப்பான மையங்களைக் கொண்டுள்ளது.

இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தத்தின்போது சி.எம்.டி.ஐ. இயக்குநா் நாகஹனுமையா, இணை இயக்குநா் என்.பாலசுப்பிரமணியம், மூத்த நிா்வாக அதிகாரி எம்.ஆா்.சா்மிளா, கொங்கு பொறியியல் கல்லூரியைச் சோ்ந்த தொழில் துறை, கல்வி நிறுவன கூட்டாண்மை மையத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளா் பி.சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

அறிவியல் ஆயிரம்: பல் மருத்துவமும் நம்பமுடியாத வரலாற்று உண்மைகளும்!

போர் எதிர்ப்பு! கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள்...

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

SCROLL FOR NEXT