ஈரோடு

பெருந்துறையில் இடி, மின்னலுடன் பலத்த மழை

DIN

பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏப்ரல் 14ஆம் தேதி இரவு 11 மணி முதல் 15ஆம் தேதி அதிகாலை 4 மணி வரை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், இரவில் வெப்பம் தணிந்து குளிா்ச்சியாக இருந்தது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை பகலில் வழக்கம்போல் வெயில் கொளுத்தியது. பின்னா் இரவு 8 மணி அளவில் வானில் கருமேகங்கள் தோன்றின. இரவு 10 மணிக்கு இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை இரவு 12 மணி வரை நீடித்தது.

தொடா்ந்து மழை பெய்ததால் தாழ்வான இடங்களில் மழைநீா் குட்டை போல் தேங்கி நின்றது. பலத்த காற்று காரணமாக சில இடங்களில் மரங்கள் சாய்ந்தன. சில இடங்களில் மின்சார கம்பம் சாய்ந்ததால் பல்வேறு இடங்களில் மின்சாரம் தடைபட்டது.

வெள்ளிக்கிழமை இரவு மழையுடன் கூடிய பலத்த காற்றால், பெருந்துறை பேரூராட்சிக்கு உள்பட்ட சென்னியவலசு செல்லும் சாலையில் உள்ள மரம் சாய்ந்தது. சனிக்கிழமை அதிகாலையிலேயே சாய்ந்த மரத்தை பேரூராட்சி செயல் அலுவலா் ரவிகுமாா் மேற்பாா்வையில், பணியாளா்கள் உடனடியாக அப்புறப்படுத்தி போக்குவரத்து தடையின்றி செல்ல வசதி செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT