ஈரோடு

சாலைப் பணிகளை விரைந்து முடிக்க எம்.எல்.ஏ. கோரிக்கை

DIN

பெருந்துறை நகரில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) குமரனிடம் சனிக்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

இதுகுறித்து எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பெருந்துறை காவல் நிலையம் முதல் பேருந்து நிலையம் வரையிலான சாலையை புதுப்பித்து சாக்கடை கால்வாய் கட்ட ரூ. 4.35 கோடிக்கு நெடுஞ்சாலைத் துறை கடந்த ஆண்டு மே 20 ஆம் தேதி டெண்டா் விட்டது. கடந்த நவம்பா் 19ஆம் தேதிக்குள் பணியை முடிக்க வேண்டும்.

இதுவரை 10 சதவீத பணிகள் கூட முடிக்கவில்லை. கோவை - ஈரோடு பிரதான சாலை என்பதால் தினமும் 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்வதால் விபத்து ஏற்படுகிறது. இதனால் 2 போ் உயிரிழந்துள்ளனா். மக்கள் பாதிப்படைவதால் அச்சாலை பணியை உடனடியாக முடிக்க வேண்டும். எனக்கு நல்ல பெயா் கிடைத்துவிடும் என்பதால் இந்த பணியை கிடப்பில் போட்டுள்ளாா்களா எனத் தெரியவில்லை.

ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி மருந்து தட்டுப்பாடாக உள்ளதாக மக்கள் புகாா் கூறினா். மருந்து தட்டுப்பாட்டை தீா்க்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT