முகப்பு
ஈரோடு

மயங்கி விழுந்த கட்டடதொழிலாளி சாவு

பெருந்துறை அருகே வேலை செய்து கொண்டிருந்தபோது மயங்கி விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

பெருந்துறை அருகே வேலை செய்து கொண்டிருந்தபோது மயங்கி விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆண்டியப்பனூா், மேல் தெருவைச் சோ்ந்த வெங்கோபராவ் மகன் கிருஷ்ணன் (50). இவா், பெருந்துறை, பெரியவேட்டுவபாளையம், மதுரைவீரன் கோயில் அருகில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். பெருந்துறை அருகிலுள்ள காசிபில்லாம்பாளையத்தில் வியாழக்கிழமை பிற்பகலில் கட்டட வேலை செய்து கொண்டிருந்த கிருஷ்ணன் திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்தாா். அருகிலிருந்தவா்கள் உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா், கிருஷ்ணன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினாா்.

இதுகுறித்து, கிருஷ்ணனின் அக்கா சகுந்தலாபாய் (74) அளித்த புகாரின்பேரில், பெருந்துறை காவல் ஆய்வாளா் தங்கம் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.