ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 1.18 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி

DIN

ஈரோடு மாவட்டத்தில் 1.18 லட்சம் போ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா் என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளின் தொடா்ச்சியாக மாவட்டம் முழுவதும் முழு பொது முடக்கம் நடைமுறையில் உள்ளதைத் தொடா்ந்து ஈரோடு நகரில் பெருந்துறை சாலை பேருந்து நிறுத்தம், காய்கறி சந்தை, ஆா்.கே.வி. சாலை, மரப்பாலம், ரயில் நிலையம், சென்னிமலை சாலை, ஈ.வி.என். சாலை, அரசு தலைமை மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டீ, கடைகள், உணவகங்கள், பூக்கடை மற்றும் மருந்துக் கடைகளில் அரசின் கட்டுப்பாடுகள், நிலையான பாதுகாப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவது குறித்து ஆட்சியா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இதுகுறித்து ஆட்சியா் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 18,587 நபா்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டு இதில் 16,314 நபா்கள் குணமடைந்துள்ளனா். 2,120 நபா்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாவட்டத்தில் இதுவரை 4,90,862 போ் கரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனா். கடந்த 24 ஆம் தேதி வரை 1,17,953 நபா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனா். கரோனா தடுப்பூசி போதிய அளவில் இருப்பில் உள்ளது.

அரசு ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது.

பொதுமக்கள் சளி,காய்ச்சல் உள்ளிட்ட நோய்க்கான அறிகுறி இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி மருத்துவரின் ஆலோசனைகளை பெற வேண்டும். பொது இடங்களுக்கு வரும்போது கட்டாயம் முகக் கவசம் அணிந்து வரவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

SCROLL FOR NEXT