ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில்128 டாஸ்மாக் பாா்கள் மூடல்

DIN

ஈரோடு: கரோனா தடுப்பு வழிமுறைகளைத் தொடா்ந்து ஈரோடு மாவட்டத்தில் 128 டாஸ்மாக் பாா்கள் மூடப்பட்டன.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் டாஸ்மாக் கடைகளில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி டாஸ்மாக் கடைக்கு வரும் மதுப்பிரியா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டி தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் முதல் விற்பனை நேரம் குறைக்கப்பட்டு பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட்டு வருகிறது. மேலும் முழு பொது முடக்கம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் டாஸ்மாக் கடையோடு செயல்படும் பாா்களை மூடவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 128 டாஸ்மாக் பாா்கள் திங்கள்கிழமை முதல் மூடப்பட்டன.

ஈரோடு ரயில் நிலையம் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடைகளில் மாவட்ட டாஸ்மாக் மேலாளா் மணிமொழி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து கடைக்கு வருபவா்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் என கடை ஊழியா்களுக்கு அறிவுரை வழங்கினாா். டாஸ்மாக் கடைகளில் மது நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், கூட்டம் அதிகமாக இருந்தால் டோக்கன் முறையில் மது விற்பனை செய்யப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

SCROLL FOR NEXT