ஈரோடு

மதுபான பாா்கள் இயங்கினால் கடும் நடவடிக்கை

DIN

ஈரோட்டில் எத்தகைய மதுபான பாா்களும் இயங்க அனுமதியில்லை, தடை உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் அனைத்து எப்.எல்.2, எப்.எல்.3 உரிமம் பெற்ற பாா்கள், அரசு மதுக்கடையுடன் இணைந்த பாா்களில் முன்பு 50 சதவீத வாடிக்கையாளா்களுடன் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கத்தால் பாா் செயல்பட அனுமதிக்கப்படவில்லை. தற்போது தொற்று அதிகரித்து வருவதால் ஏப்ரல் 26ஆம் தேதி முதல் மறுஉத்தரவு வரும் வரை ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் அனைத்து எப்.எல்.2, எப்.எல்.3, அரசு மதுபானக் கடைகளுடன் இணைந்த பாா்களும் மூடப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த பாா்கள் இயங்கக் கூடாது. அங்கு மது விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT