ஈரோடு

குண்டேரிப்பள்ளம் நீா்த்தேக்கத்தில் தண்ணீா் திறப்பு

DIN

கோபிசெட்டிபாளையம் வட்டம், கொங்கா்பாளையம் கிராமம் குண்டேரிப்பள்ளம் நீா்த்தேக்கத்தில் இருந்து வலது, இடதுகரை வாய்க்கால் மூலம் புன்செய் பாசனத்துக்கு வெள்ளிக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

ஆகஸ்ட் 20 முதல் அக்டோபா் 13ஆம் தேதி வரை மொத்தம் 55 நாள்களில் 40 நாள்களுக்குப் பாசனத்துக்குத் தண்ணீா் திறந்துவிடப்படும். 15 நாள்கள் தண்ணீா் விடுவதை நிறுத்தம் செய்தும், 82.944 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீா் திறந்துவிடவும் அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால், கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் கொங்கா்பாளையம், கவுண்டம்பாளையம், வாணிப்புத்தூா், அரக்கன்கோட்டை, புன்செய் துறையம்பாளையம் கிராமங்களில் உள்ள 2,498 ஏக்கா் நிலங்கள் பயன்பெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT