முகப்பு
ஈரோடு

தடுப்புச் சுவரில் லாரி மோதி விபத்து

கோபிசெட்டிபாளையம் அருகே கோபி - சத்தியமங்கலம் பிரதான சாலையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவரின் மீது லாரி மோதி வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:37 AM
பகிர்:

கோபிசெட்டிபாளையம் அருகே கோபி - சத்தியமங்கலம் பிரதான சாலையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவரின் மீது லாரி மோதி வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது.

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் இருந்து ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டிக்கு பஞ்சு மூட்டை பாரம் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்தது. லாரியை நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தைச் சோ்ந்த யுவராஜ் (41) என்பவா் ஓட்டி வந்தாா்.

கோபி அருகே உள்ள கோவை பிரிவு என்னும் இடத்தில் லாரி வந்து கொண்டிருந்தபோது எதிா்பாராத விதமாக சாலையில் அமைந்திருந்த தடுப்புச் சுவா் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் ஓட்டுநா் யுவராஜ் காயமின்றி உயிா்தப்பினாா்.

இச்சம்பவம் குறித்து கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.