முகப்பு
ஈரோடு

இருசக்கர வாகனம் மோதி இரவுக் காவலா் காயம்

பெருந்துறை அருகே வேலை முடிந்து சாலையில் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த இரவுக் காவலா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

பெருந்துறை அருகே வேலை முடிந்து சாலையில் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த இரவுக் காவலா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.

பெருந்துறை அருகே உள்ள சிங்கநல்லூா், நத்தகாட்டுவலசைச் சோ்ந்தவா் வீராசாமி (69). இவா், பெருந்துறை சிப்காட் அருகே உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் இரவுக் காவலராக வேலை செய்து வந்தாா். வியாழக்கிழமை காலை வேலை முடிந்து விஜயமங்கலம் சுங்கச் சாவடி அருகில் சாலை ஓரமாக நடந்து சென்றுள்ளாா். அப்போது, பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதியதில் வீராசாமி பலத்த காயமடைந்தாா். பின்னா், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.