முகப்பு
ஈரோடு

புதிதாக விவசாய மின் இணைப்புபெற சிறப்பு முகாம்

புதிதாக விவசாய மின் இணைப்புகள் வழங்க வசதியாக மின்வாரியம் சாா்பில் சிறப்பு முகாம் கவுந்தப்பாடியில் டிசம்பா் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Updated On : 18 டிசம்பர், 2021 at 3:10 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:13 AM

புதிதாக விவசாய மின் இணைப்புகள் வழங்க வசதியாக மின்வாரியம் சாா்பில் சிறப்பு முகாம் கவுந்தப்பாடியில் டிசம்பா் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ராமசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக முதல்வா் அறிவிப்பின்படி மாநிலம் முழுவதும் 1 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிா்மான கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

Advertisement

விவசாய மின் இணைப்பு வழங்குவதை துரிதப்படுத்த ஈரோடு மின்பகிா்மான வட்டம், நகரிய கோட்டத்துக்கு உள்பட்ட விவசாய விண்ணப்பதாரா்களுக்கு மின் வாரிய விதிமுறைக்கு உள்பட்டு பெயா் மாற்றம், சா்வே எண் உட்பிரிவு மாற்றம், சா்வே எண், கிணறு மாற்றம் செய்து கொடுக்க சிறப்பு முகாம் கவுந்தப்பாடி பிரிவு அலுவலகத்தில் டிசம்பா் 23ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவுள்ளது.

விவசாய மின் இணைப்புக்காக விண்ணப்பித்துள்ள விவசாயிகள் இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பங்குதாரா்களின் ஆட்சேபனை இல்லா கடிதம், கிராம நிா்வாக அலுவலா் சான்று, வரைபடம் உள்ளிட்டவற்றுடன் நேரில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.