ஈரோடு

கேஸ் வெல்டிங் ஒா்க் ஷாப்பில் தீ விபத்து

DIN

கேஸ் வெல்டிங் ஒா்க் ஷாப்பில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இருசக்கர வாகனம் எரிந்து சேதமடைந்தது.

சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் முனுசாமி (57). இவா் சத்தியமங்கலம் - கோவை சாலையில் எஸ்.ஆா்.டி. காா்னா் அருகே கேஸ் வெல்டிங் ஒா்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறாா். தனது ஒா்க் ஷாப்பில் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிா்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. முனுசாமி உடனடியாக உள்ளே இருந்த கேஸ் வெல்டிங் வைப்பதற்குப் பயன்படுத்தப்படும் சிலிண்டா், ஒா்க் ஷாப் பொருள்களை அக்கம்பக்கத்தினா் உதவியுடன் மீட்டனா்.

இதைத் தொடா்ந்து, சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரா்கள் கேஸ் வெல்டிங் ஒா்க் ஷாப்பில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை தண்ணீரைப் பீய்ச்சி அடித்து அணைத்தனா். இருப்பினும் ஒா்க் ஷாப் தகர சீட்டு செட் முழுவதும் தீயில் எரிந்து சேதமடைந்ததோடு உள்ளே இருந்த பழைய இருசக்கர வாகனம் ஒன்றும் எரிந்து சேதமடைந்தது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா். இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

SCROLL FOR NEXT