ஈரோடு

பெருந்துறையில் குப்பை சலிக்கும் பணி

DIN

பெருந்துறை பேரூராட்சி, வாா்டு எண் 12 பணிக்கம்பாளையத்தில் வளமீட்பு பூங்காவில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ், பயோமைனிங் மூலம் குப்பை சலிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை சென்னை, பேரூராட்சிகள் இணை இயக்குநா் (திட்டம்) எஸ்.எம்.மலையமான் திருமுடிக்காரி புதன்கிழமை நேரடியாக ஆய்வு செய்தாா். தொடா்ந்து, கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி வாா்டு எண் 2இல் சமாதானபுரம் வளமீட்பு பூங்காவில் திடக்கழிவு மேலாண்ணை திட்டத்தின்கீழ் பயோமைனிங் மூலம் குப்பை சலிக்கும் பணியையும் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, ஈரோடு மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநா் பெ.கணேஷ்ரோம், செயற்பொறியாளா் மகேந்திரன், ஈரோடு மாவட்ட உதவி செயற்பொறியாளா் பி.மோகன், திப்பூா் மாவட்ட உதவி செயற்பொறியாளா் எம்.லலிதாமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

SCROLL FOR NEXT