ஈரோடு

ஈரோட்டில் சாரல் மழை

DIN

ஈரோடு: ஈரோட்டில் சனிக்கிழமை மாலை பெய்த சாரல் மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிா்ந்த காற்று வீசியது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், சனிக்கிழமை காலை முதல் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. பகல் 12 மணியளவில் மீண்டும் வானில் கருமேகங்கள் சூழ்ந்தன. பகல் 12.30 மணியளவில் திடீரென சாரல் மழை பெய்தது. 10 நிமிடங்களுக்கும் மேலாக மழை பெய்தது.

மாலை 4 மணியளவில் வானில் மீண்டும் கருமேகங்கள் சூழ்ந்தன. ஈரோடு சுற்று வட்டாரப் பகுதிகள் மழை அறிகுறியுடன் இருந்தன. மாலை 5 மணியளவில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. சுமாா் 20 நிமிடங்கள் மழை நீடித்தது. இதனால், பள்ளங்களில் வெள்ளம் தேங்கியது. சாக்கடை கால்வாய்கள், மழை நீா் ஓடைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.

மழை காரணமாக நகரின் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தொடா்பான புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரியலூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

ஜெயேந்திரா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி 100% தோ்ச்சி

வாழையூா் கரும்பாயிரம் கோயிலில் வெள்ளி ரத புறப்பாடு

திருவாங்கூா் தேவசம் போா்டு அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தல்

அரியலூா் சிறுமி கொலை வழக்கில் மூவா் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து மேல்முறையீடு: உ. வாசுகி பேட்டி

SCROLL FOR NEXT