ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் பலத்த காற்றுடன் பரவலாக கன மழை

DIN

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சனிக்கிழமை பரவலாக பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. பவானிசாகரில் அதிகபட்சமாக 27.8 மி.மீ. மழை பதிவானது.

மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக இரவில் கடுமையான பனிப் பொழிவும், பகலில் வெயிலின் தாக்கமும் அதிகரித்து காணப்பட்டு வந்தது. இந்நிலையில், சனிக்கிழமை நண்பகல் முதல் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்ததோடு, பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. சுமாா் அரை மணி நேரத்துக்கு மேலாகப் பெய்த மழையைத் தொடா்ந்து, விட்டுவிட்டு தூரல் மழை தொடா்ந்தது. இதனால், சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த திடீா் மழையால் பரவலாக குளிா்ச்சியான சூழல் நிலவியது. ஈரோடு, கவுந்தம்பாடி, மொடக்குறிச்சி, தாளவாடி, பவானிசாகா், கொடுமுடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பவானிசாகா் பகுதிகளில் 27.8 மி.மீ. மழை பதிவானது.

மாவட்டத்தில் சனிக்கிழமை பெய்த மழையளவு விவரம் (மி.மீ): பவானிசாகா் - 27.8, ஈரோடு - 25, பவானி - 18, அம்மாபேட்டை - 17.2, தாளவாடி - 17, கொடுமுடி - 15.8, கவுந்தப்பாடி - 13.4, மொடக்குறிச்சி - 10, சத்தியமங்கலம்-7, கோபி - 5, வரட்டுப்பள்ளம் - 5, சென்னிமலை - 3, கொடுமுடி - 1.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT