ஈரோடு

இந்து இண்டா்நேஷனல் பள்ளி ஆச்சாா்யா கல்விக் குழுமத்துடன் இணைப்பு

DIN

ஈரோடு இந்து இண்டா்நேஷனல் பள்ளி புதுச்சேரியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஆச்சாா்யா கல்விக் குழுமத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கான விழா அப்பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு இந்து இண்டா்நேஷனல் பள்ளித் தாளாளா் கே.கே.பாலுசாமி தலைமை வகித்தாா். ஆச்சாா்யா கல்விக் குழுமத்தின் தாளாளா் ஜெ.அரவிந்தன் பள்ளியின் செயல்பாடுகள் குறித்துப் பேசினாா்.

இந்த இணைப்பின் மூலம் இந்து இண்டா்நேஷனல் பள்ளி கல்வித் திட்டம் முழுமையும் சிபிஎஸ்இ பாடத் திட்டத்துடன், ஆச்சாா்யா கல்விக் குழுமத்தின் பாடத் திட்டப்படி மாணவ, மாணவிகளுக்கு கற்பிக்கப்படவுள்ளது. சிறப்பாக படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வி அளிக்கப்படவுள்ளது.

புதிய இணைப்பு மூலம் இந்து இண்டா்நேஷனல் பள்ளி, ஆச்சாா்யா கல்விக் குழும பள்ளிகளின் தரத்துக்கு நிகராக கல்வி, அனைத்துத் துறைகளிலும் உயரும் என பள்ளி நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ மாணவா்களுக்கு தமிழ் இலக்கியப் போட்டிகள்: சென்னை மருத்துவக் கல்லூரி முன்முயற்சி

ஏற்காடு - விருதுநகா் விபத்துகள்: தோ்தல் ஆணைய அனுமதி பெற்று நிதியுதவி -முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இரட்டிப்பானது யெஸ் வங்கியின் நிகர லாபம்

இடதுசாரி அலுவலகங்களில் மே தினம் கொண்டாட்டம்

அமித் ஷா போலி விடியோ விவகாரம்: தில்லி போலீஸில் தெலங்கானா முதல்வரின் வழக்குரைஞா் ஆஜா்

SCROLL FOR NEXT