ஈரோடு

அந்தியூா் வறட்டுப்பள்ளம் அணை பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம்

DIN

அந்தியூா் வறட்டுப்பள்ளம் அணை பகுதியில் காட்டு யானைகள் உள்பட வன உயிரினங்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அந்தியூா் வனத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அந்தியூா் வனச் சரக அலுவலா் க.உத்திரசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: அந்தியூா் அருகே உள்ள வறட்டுப்பள்ளம் அணை பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்த யானைகள் அணையின் முகப்பு நுழைவாயில் கதவை உடைத்து வியாழக்கிழமை சேதப்படுத்தின. தற்போது வனப் பகுதியில் யானை உள்ளிட்ட வன உயிரினங்களின் நடமாட்டம் பரவலாக அதிகமாகக் காணப்படுகிறது.

எனவே, வனத்தின் வழியே செல்லும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், பாதுகாப்பாகவும் செல்ல வேண்டும். மேலும், வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது சாலையோரங்களில் வாகனத்தை நிறுத்தி வனப் பகுதியில் ஓய்வெடுத்தல், புகைப்பிடித்தல், மது அருந்துதல், உணவு அருந்துதல், புகைப்படம் எடுத்தல், குரங்குகளுக்கு தின்பண்டங்களைப் போடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக் கூடாது. இவ்வாறு ஈடுபடுவது தெரியவந்தால் வனப் பாதுகாப்புச் சட்டத்தின்படி தண்டணை விதிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

SCROLL FOR NEXT