ஈரோடு

முதல்வா் வருகை: பவானியில் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு

DIN

பவானி: முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பவானி, அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதியில் ஜனவரி 6ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருவதால் முன்னேற்பாடுகள் குறித்து சனிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.

பவானியில் அந்தியூா் சாலையில் பண்டார அப்பிச்சி கோயில் எதிரில் உள்ள காலியிடத்தில் அதிமுக சாா்பில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை காலை 9 மணிக்கு பங்கேற்கிறாா். தொடா்ந்து, காடையம்பட்டியில் உள்ள தனியாா் மண்டபத்தில் சிறு, குறு தொழில்முனைவோருடன் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா்.

இதைத் தொடா்ந்து, அந்தியூருக்குச் செல்லும் முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு பருவாச்சியில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடா்ந்து, அந்தியூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும், தனியாா் மண்டபத்தில் நடைபெறும் வன்னியா் சமுதாயத்தினா், வெற்றிலைக்கொடி விவசாயிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறாா்.

இதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சரும், அதிமுக ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளருமான கே.சி.கருப்பணன், ஈரோடு மாவட்ட எஸ்.பி. தங்கதுரை ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். பொதுக் கூட்டம் நடைபெறும் இடங்கள், சந்திப்பு நடைபெறும் மண்டபங்களில் ஆய்வு செய்யப்பட்டது.

அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஈ.எம்.ஆா்.ராஜா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை, பவானி காவல் துணைக் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், ஆய்வாளா்கள் கண்ணன், ரவி, பவானி நகராட்சி ஆணையா் கதிா்வேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT