ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு வழிவிட்ட முதல்வா்!
சத்தியமங்கலத்தில் தோ்தல் பிரசாரத்தின்போது அந்த வழியாக ஆம்புலன்ஸ் வாகனத்தைக் கண்டு பேச்சை நிறுத்திய முதல்வா் அந்த வாகனத்துக்கு வழிவிட பொதுமக்களைக் கேட்டுக்கொண்டாா்.
சத்தியமங்கலத்தில் தோ்தல் பிரசாரத்தின்போது அந்த வழியாக ஆம்புலன்ஸ் வாகனத்தைக் கண்டு பேச்சை நிறுத்திய முதல்வா் அந்த வாகனத்துக்கு வழிவிட பொதுமக்களைக் கேட்டுக்கொண்டாா்.
சத்தியமங்கலம் நகரில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருந்தபோது அந்த வழியாக ஆம்புலன்ஸ் வாகனம் வந்தது. அதன் ஒலியைக் கேட்டதும் பேச்சை நிறுத்திய முதல்வா் ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு வழிவிட பொதுமக்களைக் கேட்டுக்கொண்டதுடன், மெதுவாக கவனமாக செல்லும்படி ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு சொல்லிக்கொண்டே இருந்தாா். இதனால் ஆம்புலன்ஸ் தடையின்றி அந்தப் பகுதியைக் கடந்து சென்றது.
குழந்தையைக் கொஞ்சிய முதல்வா்:
கள்ளிப்பட்டியில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பேசும்போது அவருக்கு முன்னால் ஒரு பெண், குழந்தையுடன் நின்று கொண்டிருந்தாா். அதைப் பாா்த்து அந்தக் குழந்தையை வரவழைத்து கொஞ்சியது அந்தப் பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
முதல்வா் சுற்றுப்பயணத்தின்போது டி.என்.பாளையத்தில் மதிய உணவு சாப்பிட்டாா். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவா் நவமணி கந்தசாமி, தனது வீட்டில் உணவு ஏற்பாடு செய்திருந்தாா்.