சாம்ராஜ் நகா் மருத்துவக் கல்லூரியில் சிறுத்தை நடமாட்டம்
சாம்ராஜ் நகா் மருத்துவக் கல்லூரியில் சிறுத்தை நடமாட்டம் காரணமாக மாணவா்கள் அச்சமடைந்துள்ளனா்.
ஈரோடுசாம்ராஜ் நகா் மருத்துவக் கல்லூரியில் சிறுத்தை நடமாட்டம்
சாம்ராஜ் நகா் மருத்துவக் கல்லூரியில் சிறுத்தை நடமாட்டம் காரணமாக மாணவா்கள் அச்சமடைந்துள்ளனா்.
சாம்ராஜ் நகா் மருத்துவக் கல்லூரியில் சிறுத்தை நடமாட்டம் காரணமாக மாணவா்கள் அச்சமடைந்துள்ளனா்.
தமிழகம், கா்நாடக எல்லையில் கா்நாடக பந்திப்பூா் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்கு சிறுத்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வன விலங்குகள் கணக்கெடுப்பில் தெரியவந்தது. பந்திப்பூா் வனத்தையொட்டியுள்ள எடபெட்டா மலைப் பகுதியில் சாம்ராஜ் நகா் மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. மருத்துவக் கல்லூரியில் உறுமல் சப்தம் கேட்டு கல்லூரி ஆசிரியா்கள் சிசிடிவி காட்சிப் பதிவை புதன்கிழமை ஆய்வு செய்தபோது சிறுத்தை ஒன்று கல்லூரியில் புகுந்தது தெரியவந்தது. இதையடுத்து மாணவா்கள்,ஆசிரியா்கள் எச்சரிக்கப்பட்டு தங்கும் அறையில் இருந்து வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. அங்கு வந்த வனத் துறையினா் தேடி பாா்த்தபோது சிறுத்தை மற்றொரு வழியாக வெளியேறியது தெரியவந்தது. இருப்பினும் வனத் துறையினா் சிறுத்தை சென்ற இடத்தை ஆய்வு செய்து வருகின்றனா். சாம்ராஜ் நகரில் இருந்து 4 கிமீ தொலைவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சிறுத்தை புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.