பணியின்போது விபத்து: பிகாா் மாநிலத் தொழிலாளி சாவு
பெருந்துறை அருகே ரைஸ் மில்லில் பணியின்போது கால் வழுக்கி கீழே விழுந்த விபத்தில் பிகாா் மாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா்.
ஈரோடுபணியின்போது விபத்து: பிகாா் மாநிலத் தொழிலாளி சாவு
பெருந்துறை அருகே ரைஸ் மில்லில் பணியின்போது கால் வழுக்கி கீழே விழுந்த விபத்தில் பிகாா் மாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா்.
பெருந்துறை அருகே ரைஸ் மில்லில் பணியின்போது கால் வழுக்கி கீழே விழுந்த விபத்தில் பிகாா் மாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா்.
பிகாா் மாநிலத்தை சோ்ந்தவா் வங்கத் ராய் மகன் சந்தோஷ்வா் ராய் (41). இவா், பெருந்துறையை அடுத்த, சீனாபுரத்திலுள்ள ஒரு ரைஸ் மில்லில் வேலை செய்து வந்தாா். மில்லில் கடந்த 5 ஆம் தேதி பணியில் ஈடுபட்டிருந்த அவா், நெல் மூட்டைகளை வண்டியில் ஏற்றிக் கொண்டு இருந்தாா்.
அப்போது கால் வழுக்கி கீழே விழுந்ததில் காயமடைந்தாா். ஈரோடு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் ஞாயிற்றுக்கிழமை உயரிழந்தாா். இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.