முகப்பு
ஈரோடு

2,148 நல வாரிய பயனாளிகளுக்கு பொங்கல் தொகுப்பு

மொடக்குறிச்சி தொகுதியில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் உள்ள பயனாளிகளுக்கு தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
பகிர்:

மொடக்குறிச்சி தொகுதியில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் உள்ள பயனாளிகளுக்கு தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணி கலந்துகொண்டு 1,400 பயனாளிகளுக்கு பொங்கல் தொகுப்பை வழங்கி விழாவைத் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், மொடக்குறிச்சி ஒன்றியத் தலைவா் கணபதி, துணைத் தலைவா் மயில் (எ) சுப்பிரமணி, லக்காபுரம் பஞ்சாயத்து தலைவா் சாலைமாணிக்கம், மொடக்குறிச்சி பேரூா் செயலாளா் ரவி (எ) சண்முகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தொடா்ந்து, கொடுமுடி ஒன்றியத்தில் 748 பயனாளிகளுக்கு பொங்கல் தொகுப்புகளை எம்.எல்.ஏ. வழங்கினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →