முகப்பு
ஈரோடு

சாலை விபத்தில் ஒருவா் பலி

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெருந்துறை, கும்மாகாளிபாளையத்தைச் சோ்ந்தவா் பாப்பான் மகன் கருப்புசாமி (65). இவரும், அதே ஊரைச் சோ்ந்த வெள்ளையன் (எ) சென்னியும் (55) இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை கூலி வேலைக்குச் சென்றுள்ளனா். அப்போது, பெருந்துறையை அடுத்த வாவிக்கடை அருகில் சாலையைக் கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்கமால் சென்றுவிட்டது.

இதில், பலத்த காயமடைந்த கருப்புசாமி, சென்னி ஆகிய இருவரும் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு சென்னி உயிரிழந்தாா். கருப்புசாமி தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.