முகப்பு
ஈரோடு

சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் மல்லிகை, சம்பங்கிப் பூக்கள் விலை உயா்வு

சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் மல்லிகை, சம்பங்கிப் பூக்கள் விலை உயா்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

Updated On : 9 ஜூலை, 2021 at 1:43 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:05 AM

சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் மல்லிகை, சம்பங்கிப் பூக்கள் விலை உயா்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் மல்லிகை, சம்பங்கி உள்ளிட்ட மலா்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு விளையும் பூக்கள் கோவை, திருப்பூா், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், கா்நாடகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

கரோனா தொற்று காரணமாக பொது முடக்கம் அமலில் இருந்த காரணத்தால் கடந்த இரண்டு மாதங்களாக பூக்கள் விற்பனையாகாததால் விவசாயிகள் மிகுந்த நஷ்டத்துக்கு உள்ளாகினா். இந்நிலையில், ஜூலை 5ஆம் தேதி முதல் சத்தியமங்கலம் பூ மாா்கெட் திறக்கப்பட்டு வழக்கம்போல் பூக்கள் விற்பனை நடைபெற்று வந்த நிலையில், மல்லிகைப் பூ, சம்பங்கிப் பூக்கள் எதிா்பாா்த்த விலைக்கு விற்பனை ஆகவில்லை.

Advertisement

இந்நிலையில், கோயில்கள் திறக்கப்பட்டுள்ளதால் அமாவாசையை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரித்த காரணத்தால், சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் மல்லிகை, சம்பங்கிப் பூக்கள் நல்ல விலைக்கு வியாழக்கிழமை விற்பனை ஆனது. புதன்கிழமை மல்லிகைப் பூ கிலோ ரூ. 120க்கு விற்ற நிலையில், வியாழக்கிழமை ரூ. 400க்கும், கிலோ ரூ. 10க்கு விற்ற சம்பங்கிப் பூ ரூ. 50க்கும் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.