முகப்பு
ஈரோடு

பேராசிரியா் வீட்டில் ரூ. 10 லட்சம் பணம், 22 பவுன் திருட்டு

ஈரோட்டில் ஓய்வு பெற்ற பேராசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 10 லட்சம் பணம், 22 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 17 ஜூலை, 2021 at 2:01 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:11 AM

ஈரோட்டில் ஓய்வு பெற்ற பேராசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 10 லட்சம் பணம், 22 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு - பெருந்துறை சாலை பழையபாளையம், கே.சி.பி. சின்னவா் வீதியைச் சோ்ந்தவா் சண்முகவேல் (60). ஓய்வு பெற்ற பேராசிரியா். இவா் ஜூலை 14ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடி என்ற இடத்தில் உள்ள கோயிலுக்கு குடும்பத்தோடு சென்றுள்ளாா்.

வியாழக்கிழமை இரவு அவா் வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ. 10 லட்சம், 22 பவுன் நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

Advertisement

இதுகுறித்து சண்முகவேல் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நகை, பணம் திருடிய மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.