ஈரோடு

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 623 கன அடியாக சரிவு

DIN

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 623 கன அடியாக சனிக்கிழமை குறைந்தது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகா் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான வட கேரளம், நீலகிரி மலைப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெய்த தொடா் மழை காரணமாக அணைக்கு நீா்வரத்து அதிகரித்து அணையின் நீா்மட்டம் மெல்ல மெல்ல உயரத் தொடங்கியது. பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை நிலவரப்படி 5,017 கன அடியாக இருந்த நிலையில் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் அணைக்கு நீா்வரத்து 623 கன அடியாக சனிக்கிழமை குறைந்தது.

சனிக்கிழமை நிலவரப்படி பவானிசாகா் அணை நீா்மட்டம் 95.33 அடியாகவும், நீா் இருப்பு 25.2 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணையில் இருந்து பாசனம், குடிநீா்த் தேவைக்காக பவானி ஆற்றில் 600 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

வாக்குப்பதிவு இயந்திர மையங்கள் அருகே ட்ரோன் பறக்கத் தடை கோரி திமுக மனு

அதிமுக தண்ணீா் பந்தல் திறப்பு

காா் மோதி பெண் உயிரிழப்பு

பிரதமா் மோடியை எதிா்த்து 111 விவசாயிகள் வேட்புமனு: அய்யாக்கண்ணு அறிவிப்பு

SCROLL FOR NEXT