பேருந்துச் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் அந்தியூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம். 
ஈரோடு

அந்தியூரில் இருந்து உதகைக்கு பேருந்துச் சேவை தொடக்கம்

அந்தியூரில் இருந்து உதகைக்கு புதிய வளர்ப்பு வழித்தடத்தில் பேருந்துச் சேவை திங்கள்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

DIN

அந்தியூரில் இருந்து உதகைக்கு புதிய வளர்ப்பு வழித்தடத்தில் பேருந்துச் சேவை திங்கள்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், அந்தியூரில் இருந்து வெளியூரில் உள்ள சுற்றுலா தலங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு பொதுமக்கள் நேரடியாக செல்ல பேருந்துச் சேவையினைத் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். 

இதனை நிறைவேற்றும் வகையில் அந்தியூரில் இருந்து உதகை வரை (கோபி, நம்பியூர் புளியம்பட்டி, மேட்டுப்பாளையம்,  குன்னூர்) வழியாக பேருந்துச் சேவை தொடங்கப்பட்டது. 

அந்தியூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் புதிய வழித்தடத்தில் பேருந்துச் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாள்தோறும் அந்தியூரில் அதிகாலை 4.20 மணிக்கு புறப்பட்டு 10 மணிக்கு ஊட்டி சென்றடைகிறது. ஊட்டியிலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 11.30 மணிக்கு அந்தியூர் வந்தடைகிறது.

கடந்த வாரம் அந்தியூரில் இருந்து திருச்செந்தூருக்கு பேருந்து வசதி தொடங்கப்பட்ட நிலையில் ஊட்டிக்கு தற்போது பேருந்து சேவை தொடங்கப்பட்டது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியில் பொதுமக்கள், திமுகவினர், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

பா்கூா் மலையில் மஞ்சள் தோட்டத்துக்குள் கஞ்சா செடிகள் வளா்த்த விவசாயி கைது

SCROLL FOR NEXT