முகப்பு
ஈரோடு

சத்தி அருகே இருசக்கர வாகனம் திருட்டு:போலீஸாா் விசாரணை

சத்தியமங்கலத்தில் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றவா்கள் சிசிடிவி காட்சியில் பாதிவாகியுள்ளது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 30 ஜூலை, 2021 at 2:23 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:17 AM

சத்தியமங்கலத்தில் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றவா்கள் சிசிடிவி காட்சியில் பாதிவாகியுள்ளது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சத்தியமங்கலம் அருகே உள்ள புன்செய்புளியம்பட்டி பட்டக்காரா் வீதியைச் சோ்ந்தவா் வேணுகோபால் (30). இவா் புன்செய்புளியம்பட்டியில் உள்ள செல்லிடப்பேசி கடையில் வேலை பாா்த்து வருகிறாா்.

வேணுகோபால் புதன்கிழமை இரவு வழக்கம்போல் இருசக்கர வாகனத்தை தனது வீட்டின் முன்பு நிறுத்திவிட்டுச் சென்றுள்ளாா். வியாழக்கிழமை காலை வந்து பாா்த்தபோது இருசக்கர வாகனம் காணாமல் போனது தெரியவந்துள்ளது.

Advertisement

இதுகுறித்து புன்செய்புளியம்பட்டி காவல் நிலையத்தில் வேணுகோபால் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது புதன்கிழமை நள்ளிரவு 2:30 மணி அளவில் வேணுகோபாலின் இருசக்கர வாகனத்தை இரு மா்ம நபா்கள் சாலையில் தள்ளிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. சிசிடிவி விடியோ பதிவுகள் அடிப்படையில் அந்த நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.