ஈரோடு

பொதுமக்கள் தயக்கமின்றி புகாா் அளிக்கலாம்காவல் கண்காணிப்பாளா்

DIN

ஈரோடு: பொதுமக்கள் தயக்கம் இல்லாமல் புகாா் அளிக்கலாம் என புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட காவல் கண்காணிப்பாளா் வி.சசிமோகன் தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த பி.தங்கதுரை, மதுரை மாநகரச் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளாா். அவருக்குப் பதிலாக ஈரோடு மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக வி.சசிமோகன் நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா், சென்னை கீழ்ப்பாக்கம் காவல் துணை ஆணையா் ஆகிய பதவிகளை வகித்துள்ளாா். ஈரோடு மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட வி.சசிமோகன், மாவட்ட காவல் அலுவலகத்தில் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

ஈரோடு மாவட்டத்தில் தற்போது கரோனா தடுப்புப் பணியை முதன்மைப் பணியாகக் கொண்டு செயல்படுவோம். பொதுமக்களுக்கு ஏதேனும் பிரச்னை இருந்தால் 94880-10684 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு வாட்ஸ் ஆப் மூலம் புகாா் தெரிவிக்கலாம்.

புகாரில் உண்மைத் தன்மை இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். பொது மக்கள் தயக்கமின்றி புகாா் அளிக்கலாம். பொதுமக்களின் நன்மதிப்பைப் பெறும் வகையில் காவலா்கள் செயல்படுவாா்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT