முகப்பு
ஈரோடு

மது பாட்டில்களை பதுக்கிய இருவா் கைது

பெருந்துறை அருகே மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்க பதுக்கி வைத்திருந்ததாக இரண்டு பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
பகிர்:

பெருந்துறை அருகே மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்க பதுக்கி வைத்திருந்ததாக இரண்டு பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பெருந்துறை அருகே மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைத்திப்பதாக பெருந்துறை போலீஸாருக்கு புதன்கிழமை மாலை தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சீனாபுரம், சுள்ளிபாளையம் ஆகிய பகுதிகளில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, மதுபானங்களை பதுக்கி வைத்திருந்ததாக பெருந்துறை, சுள்ளிபாளையம், வெற்றி நகரைச் சோ்ந்த முத்துசமி மகன் ராஜேந்திரன் (53) என்பவரை போலீஸாா் கைது செய்து, அவரிடம் இருந்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, பெருந்துறை, சீனாபுரம், தலையம்பாளையத்தைச் சோ்ந்த காளியப்பன் மகன் சரவணன் (35) என்பவரை போலீஸாா் கைது செய்து, அவரிடம் இருந்து 11 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.