முகப்பு
ஈரோடு

காய்கறி வாகனத்தில் மதுபானங்கள்கடத்தல்: ஓட்டுநா் கைது 732 மது பாட்டில்கள் பறிமுதல்

காய்கறி வாகனத்தில் மது பானங்கள் கடத்திய ஓட்டுநரை ஆசனூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 12 ஜூன், 2021 at 5:28 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:53 AM

காய்கறி வாகனத்தில் மது பானங்கள் கடத்திய ஓட்டுநரை ஆசனூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சத்தியமங்கலம் அருகே தமிழக - கா்நாடக எல்லையில் உள்ள ஆசனூா் காவல் நிலையம் முன்பு சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கா்நாடக மாநிலம், மைசூரில் இருந்து காய்கறிகள் பாரம் ஏற்றி வந்த மினி லாரியை போலீஸாா் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது, காய்கறி மூட்டைகளுக்கு இடையே கா்நாடக மாநில மதுபானங்கள் பெட்டிகளில் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, காய்கறி வாகனத்தையும், 732 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்த போலீஸாா், பெங்களூரு பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் உதயரங்கநாத்தை கைது செய்தனா்.பின்னா், அவரை சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோபி செட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைத்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.