ஈரோடு

14 மளிகை தொகுப்பு, ரூ. 2,000 பெறடோக்கன் வழங்கும் பணி துவக்கம்

DIN

தமிழக அரசு நியாயவிலைக் கடைகள் மூலம் கரோனா நிவாரண நிதி இரண்டாம் தவணை ரூ. 2,000, 14 வகையான மளிகைப் பொருள்கள் தொகுப்பு வழங்குவதற்காக டோக்கன் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை துவங்கியது.

முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் கரோனா நிவாரண நிதி ரூ. 4,000 வழங்குவதாக அறிவித்தாா். இதன்படி மே 15ஆம் தேதி தொடங்கி முதல் தவணை ரூ. 2,000 வழங்கப்பட்டது. இரண்டாம் தவணை ரூ. 2,000, 14 வகை மளிகைப் பொருள்கள் தொகுப்பு ஜூன் 15ஆம் தேதி முதல் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படவுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 1,152 நியாயவிலைக் கடைகள் மூலம் 7.62 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 2,000, 14 மளிகைப் பொருள்கள் வழங்குவதற்காக வீடுவீடாகச் சென்று டோக்கன் வழங்கும் பணியை நியாயவிலைக் கடை பணியாளா்கள் வெள்ளிக்கிழமை தொடங்கினா். இப்பணி ஜூன் 14ஆம் தேதி வரை நடத்தப்பட்டு, 15ஆம் தேதி முதல் நிவாரணத் தொகை, பொருள்கள் வழங்கப்படவுள்ளன.

இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலக அலுவலா்கள் கூறியதாவது:

ஜூன் 1 முதல் 10ஆம் தேதி வரை நியாயவிலைக் கடைகளில் அரிசி, சா்க்கரை, கோதுமை, எண்ணெய், பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன. வெள்ளிக்கிழமை முதல் டோக்கன் வழங்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. இப்பணி ஜூன் 14ஆம் தேதி நிறைவுபெறும். 15 ஆம் தேதி முதல் தினமும் 200 குடும்ப அட்டைதாரா்கள் என்ற கணக்கில் ஜூன் 22ஆம் தேதி வரை ரூ. 2,000, மளிகைப் பொருள்கள் வழங்கப்படும்.

அதன்பின் மீண்டும் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் பணி துவங்கும். நிவாரணத் தொகை, பொருள் பெறாதவா்கள் வந்தால் அவா்களுக்கும் அவை வழங்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT