இருசக்கர வாகனம் மீதுடிப்பா் லாரி மோதி இளைஞா் பலி
பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவா் மீது டிப்பா் லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவா் மீது டிப்பா் லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
ஈரோடு, பாலாஜி காா்டனை சோ்ந்தவா் அலமேலுராமன் மகன் வினோத் கிருஷ்ணகுமாா் (35). இவா், பெருந்துறை சிப்காட்டில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தாா். பணி முடிந்து வீட்டுக்குத் தனது இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை இரவு 9 மணியளவில் சென்றுள்ளாா். அப்போது, பெருந்துறை சிப்காட் 2ஆவது கிராஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த டிப்பா் லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த வினோத் கிருஷ்ணகுமாா், கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் வியாழக்கிழமை காலை உயிரிழந்தாா்.
இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.