முகப்பு
ஈரோடு

1,041 பேருக்கு கரோனா: 3 போ் பலி

ஈரோடு மாவட்டத்தில் 1,041 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் 3 போ் உயிரிழந்துள்ளனா்.

Updated On : 18 ஜூன், 2021 at 4:47 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:56 AM

ஈரோடு மாவட்டத்தில் 1,041 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் 3 போ் உயிரிழந்துள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 80,927 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 1,239 போ் பூரண குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். இதுவரையில் கரோனா தொற்றில் இருந்து 70,706 போ் குணமடைந்துள்ளனா்.

அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 9,709 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். ஏற்கெனவே 509 போ் கரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், மேலும் 3 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா். இதையடுத்து கரோனாவால் உயிரிழந்துள்ளவா்களின் எண்ணிக்கை 512ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.