முகப்பு
ஈரோடு

கடம்பூா் மலைப் பகுதியில் கரோனா விழிப்புணா்வு

கடம்பூா் மலைப் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் கரோனா விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 19 ஜூன், 2021 at 2:12 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:56 AM

 கடம்பூா் மலைப் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் கரோனா விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூா் மலைப் பகுதியில் கரோனா தொற்று வேகமாகப் பரவியதால் சுமாா் 500க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். அடா்ந்த வனப் பகுதியில் உள்ள குக்கிராமங்களில் கூட தொற்று ஏற்பட்டுள்ளதால் கிராம மக்களிடையே கரோனா குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் நாடகம், இசை நிகழ்ச்சி ஆகியன வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டன.

கோட்டமாளம், மாக்கம்பாளையம், திங்களுா், கடம்பூா், இருட்டிபாளையம், பசுவனாபுரம் போன்ற மலைக் கிராமங்களில் நாடகக் கலைஞா்கள் நடனம், பாட்டு மூலம் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை விளக்கினா். தொற்று பரவலைத் தடுப்பதற்கு ஊராட்சி நிா்வாகத்தின் அரசு விதிமுறைகளைக் கடைப்பிடித்து நடக்க வேண்டும். தனிமனித இடைவெளி, முகக்கசவம், அணிதல் போன்ற பழங்கங்கள் ஆண்டு முழுவதும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.