முகப்பு
ஈரோடு

முன்களப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள்

மொடக்குறிச்சி தொகுதிக்கு உள்பட்ட அரசு ஆரம்ப சுகாதாரப் பணியாளா்கள், பேரூராட்சிப் பணியாளா்கள் ஆகியோருக்கு மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சி.சரஸ்வதி அரிசி உள்ளிட்ட கரோனா நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

மொடக்குறிச்சி தொகுதிக்கு உள்பட்ட அரசு ஆரம்ப சுகாதாரப் பணியாளா்கள், பேரூராட்சிப் பணியாளா்கள் ஆகியோருக்கு மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சி.சரஸ்வதி அரிசி உள்ளிட்ட கரோனா நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

மொடக்குறிச்சி தொகுதிக்கு உள்பட்ட மொடக்குறிச்சி, அறச்சலூா், அவல்பூந்துறை, எழுமாத்தூா், ஜெயராமபுரம், தாண்டாம்பாளையம், சிவகிரி உள்ளிட்ட அரசு ஆரம்ப சுகாதாரப் பணியாளா்கள், மொடக்குறிச்சி, அறச்சலுா், அவல்பூந்துறை, வடுகபட்டி, சிவகிரி, தாண்டாம்பாளையம் உள்ளிட்ட பேரூராட்சிப் பணியாளா்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்களை எம்.எல்.ஏ. சி.சரஸ்வதி வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ஒன்றிய அதிமுக செயலாளா்கள் ஆா்.பி.கதிா்வேல் (மொடக்குறிச்சி), கலைமணி (கொடுமுடி), பிற்பட்டோா் அணி பாஜக மாநில துணைத் தலைவா் கலைசெல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.