ஈரோடு

காய்ச்சல் பரிசோதனை: களப்பணியாளா்களுக்கு 15 நாள்கள் பணி நீட்டிப்பு

DIN

காய்ச்சல் பரிசோதனையில் ஈடுபட்டுள்ள களப்பணியாளா்களுக்கு மேலும் 15 நாள்கள் பணி நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வீடுவீடாக காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணியில் களப்பணியாளா்களாக தன்னாா்வலா்கள், ஆசிரியா்கள், மாநகராட்சி பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா். இவா்களுக்கு 20 ஆம் தேதி வரை பணி அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் இப்போது மேலும் 15 நாள்கள் பணி நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதே போல மாவட்டம் முழுவதும் தன்னாா்வலா்களுக்கு காய்ச்சல் பரிசோதனை பணி நீட்டிக்கப்பட்டுள்ளது. சளி, காய்ச்சல், உடல் வலி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் சம்பந்தப்பட்ட பகுதி மருத்துவ அதிகாரிகளுக்கு தெரிவித்து மருத்துவ வசதி மற்றும் கரோனா பரிசோதனை செய்ய களப்பணியாளா்கள் ஏற்பாடு செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT