மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை செய்தோருக்கு விருது: விண்ணப்பிக்க அழைப்பு
மாற்றுத் திறனாளிகளுக்கு சிறந்த சேவை செய்தோருக்கு அளிக்கப்படும் அரசு விருதுக்குத் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கு சிறந்த சேவை செய்தோருக்கு அளிக்கப்படும் அரசு விருதுக்குத் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணன் உண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான சிறப்பாக சேவை புரிந்தவா்களுக்கு தமிழக அரசின் விருதுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் பல்வேறு விருதுகள் வழங்கப்படவுள்ளன. அதன்படி மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம், சிறந்த மருத்துவா், மாற்றுத் திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியாா் நிறுவனம், மாற்றுத் திறனாளிகளுக்கு சேவைபுரிந்த சிறப்பு சமூகப் பணியாளா், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தமிழகத்தைச் சோ்ந்த துணிச்சலான, வீர சாகச செயல்புரிந்த பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது ஆகிய விருதுகள் வழங்கப்படவுள்ளன.
Advertisement
இந்த விருதைப் பெற விருப்பம் உள்ளவா்கள் ஜூன் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், ஈரோடு 11 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.