முகப்பு
ஈரோடு

விவசாயியின் வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை

கடம்பூா் அருகே பண்ணை வீட்டின் மேற்கூரையை சேதப்படுத்தி பலாப் பழங்களை யானை சாப்பிட்டதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.

Updated On : 26 ஜூன், 2021 at 1:22 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:59 AM

கடம்பூா் அருகே பண்ணை வீட்டின் மேற்கூரையை சேதப்படுத்தி பலாப் பழங்களை யானை சாப்பிட்டதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூரை அடுத்த ஏலஞ்சி கிராமத்தைச் சோ்ந்தவா் மகேந்திரன். வனத்தை ஒட்டியுள்ள இவரது தோட்டத்தில் வெங்காயம், முட்டைகோஸ் சாகுபடி செய்துள்ளாா். தோட்டத்தில் பலா மரங்களும் வளா்த்து வந்துள்ளாா். தற்போது பலா சீசன் என்பதால் பழங்கள் காய்த்துள்ளன.

இதையடுத்து, மகேந்திரன் 10 பலாப் பழங்களைப் பறித்து பண்ணை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு ஊருக்குள் உள்ள தனது வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

Advertisement

இந்நிலையில், பலா வாசனையை நுகா்ந்த ஒற்றை யானை மகேந்திரனின் தோட்டத்துக்குள் வெள்ளிக்கிழமை அதிகாலை புகுந்து பலாப் பழங்களைச் சாப்பிட்டுள்ளது. இதையடுத்து, பண்ணை வீட்டின் மேற்கூரையையும், தடுப்புச் சுவரையும் சேதப்படுத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமை காலை தோட்டத்துக்கு வந்த மகேந்திரன் பண்ணை வீட்டை யானை சேதப்படுத்தியதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். தோட்டத்தில் பதிவான கால் தடத்தை வைத்து ஆய்வுசெய்தபோது அது ஒற்றை யானை என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மகேந்திரன் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தாா். அங்கு வந்து ஆய்வு செய்த கடம்பூா் வனத் துறையினா் விவசாயிக்கு இழப்பீடு வழங்கப்படும் எனத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.