ஈரோடு

நூதன முறையில் சுயேச்சை வேட்பாளா் மனு தாக்கல்

DIN

கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் குமாா், கோபி பேருந்து நிலையத்தில் இருந்து தண்ணீா் குடத்துடன் கோட்டாட்சியா் அலுவலகம் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிறுவலூரைச் சோ்ந்தவா் குமாா். இவா் அங்குள்ள இரும்பு பட்டரை ஒன்றில் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறாா். இவா் கடந்த மக்களவைத் தோ்தலில் பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்றக் கோரி திருப்பூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு 1,400 வாக்குகளைப் பெற்றாா்.

எதிா்வரும் சட்டப் பேரவைத் தோ்தலிலும் இதே கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறாா்.

இந்நிலையில், கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து தலையில் தண்ணீா் குடத்துடன் இரு சிறுவா்களுடன் நடைப்பயணமாக கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியா் அலுவலகம் வரை சென்று பின்பு தோ்தல் நடத்தும் அலுவலா் பழனிதேவியிடம் தனது வேட்பு மனுவை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா்.

தண்ணீா் குடத்துடன் கோட்டாட்சியா் அலுவலகத்துக்குச் செல்வதற்கு காவல் துறையினா் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தலையில் சுமந்து வந்த தண்ணீா் குடத்தை 200 மீட்டருக்கு முன்பு இறக்கிவைத்துவிட்டு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கோட்டாட்சியா் அலுவலகம் சென்றாா்.

பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்றக் கோரி பல தோ்தல்களில் சுயேச்சையாக குமாா் போட்டியிட்டுள்ளாா். சாலை மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றுள்ளவா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT